தியான மண்டபத்தில் குற்றவாளியை கைது செய்த பெங்களூரு போலீசார்

Added : மே 13, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான மண்டபத்தில், குற்றவாளிளை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.கர்நாடகா மாநிலம், பெங்களூர் சுங்கத்கட்டே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த நாகேஷ், 30, என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்தார். அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால்,
 தியான மண்டபத்தில் குற்றவாளியை கைது செய்த பெங்களூரு போலீசார்

திருவண்ணாமலை:திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தியான மண்டபத்தில், குற்றவாளிளை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூர் சுங்கத்கட்டே பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த நாகேஷ், 30, என்ற வாலிபர் ஒரு தலையாக காதலித்தார். அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார்.

தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், முகத்தில் ஆசிட் அடித்து விடுவேன் என கடந்த மாதம் 28 ம் தேதி பலர் முன்னிலையில் பெங்களூரு பசவப்பா கார்டன் பகுதியில் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அந்த பெண் மறுத்தார். ஆத்திரமடைந்த நாகேஷ் அந்த பெண்ணின் மீது ஆசிட் வீசி விட்டு தப்பி சென்றார். படுகாயமடைந்த அந்த பெண் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூர் போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து நாகேசை தேடி வந்தனர். நாகேசை தேடப்படும் குற்றவாளியாக போலீசார் அறிவித்தனர். நாகேஷ் படத்தை போஸ்டராக அச்சிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதை முழுவதும் ஒட்டப்பட்டது.
அப்போது, கிரிவலப்பாதையில் உள்ள ஒரு தனியார் ஆசிரமத்திற்கு நாகேஷ் சாமியார் வேஷத்தில் வந்து தியானத்தில் ஈடுபடுவதாகவும், இதற்காக கிரிவலப்பாதையில் சாமியார்களுடன் அவர் தங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.இதையடுத்து பெங்களூரு போலீசார் இன்று காலை காவி உடையில் வந்து அந்த ஆசிரமத்தில் காத்திருந்தனர். மற்ற போலீசார் கிரிவலப்பாதை முழுவதும் நாகேஷ் படத்துடன் சுற்றி வந்தனர்.
மாலை 5:00 மணிக்கு நாகேஷ் தியான மண்டபத்திற்குள் நுழைந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தார். போலீசார் தியான மண்டபத்தில் நுழைந்து நாகேசை கைது செய்து பெங்களூருக்கு அழைத்துச் சென்றனர்.இதனால் கிரிவலப்பாதையில் பரபரப்பு ஏற்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள சாமியார்களோடு குற்றவாளிகள் பலர் கலந்துள்ளதாகவும், அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
14-மே-202212:33:27 IST Report Abuse
jayvee எதாவது ஓரிரு கோவில்களில் கோவில் தலைமைக்கு தெரியாமல் இவர்கள் கலக்கலாம்.. அனால் அங்கு உள்ளதைப்போல, குற்றவாளிகளை, தீவிரிவதைகளை காக்குமிடமாக மாறுவது இங்கு நடக்காது
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
14-மே-202207:22:53 IST Report Abuse
N Annamalai இருக்கலாம் .குற்றவாளிகள் தஞ்சமடையும் இடமாக திருவண்ணாமலை இருக்க கூடாது .காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-மே-202205:49:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் …..
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
14-மே-202206:15:12 IST Report Abuse
RaajaRaja Cholanமூர்க்கனுக்கு மூக்கு வேர்த்துவிட்டது...
Rate this:
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
14-மே-202206:16:24 IST Report Abuse
RaajaRaja Cholanஇதே போல மூர்க்கனுக்கு மார்க்க செய்திகளுக்கும் மூக்கு வியர்த்தால் நன்றாய் இருக்கும் , ஆனா மூர்க்கன் அந்த செய்திகளில் காணாமல் போகி விடுகிறான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X