குடிநீர் கிணறு ஆழப்படுத்த ராயமங்கலத்தில் கோரிக்கை
திருப்போரூர் அடுத்த ராயமங்கலம் மற்றும் பூண்டி ஆகிய இரு கிராமங்களுக்கும், ஒரே கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோடை காலமான தற்போது, கிணற்றில் குறைந்த அளவு நீர் உள்ளது. இதனால் போதிய அளவு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, குடிநீர் வசதிக்காக மேற்கண்ட கிணற்றை ஆழப்படுத்தி, போதிய அளவு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்.சுப்பிரமணி, ராயமங்கலம், திருப்போரூர்.
ஜி.எஸ்.டி., சாலையில்வாகன ஓட்டிகள் சிரமம்
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதியில், சாலை அகலப்படுத்தும் பணி, சமீபத்தில் நிறைவடைந்தது. வாகன போக்குவரத்திற்கு சாலை விரிவுபடுத்தப்பட்டது. தற்போது, பாதசாரிகள் நடந்து செல்லும் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையில் நடைபாதை கடைகளும், இருசக்கர வாகனங்களும் அதிகளவில் நிறுத்தப்படுவதால், வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களை, நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்.
கே.கிருஷ்ணன், கூடுவாஞ்சேரி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE