திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் வழங்கப்பட உள்ளது.
நடப்பு, 2022 - 23ம் நிதியாண்டில், 285 பேருக்கு, மானிய தொகையாக, 8.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இத்திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற விரும்புவோர் www.kviconline.gov.in/pmegpeportal என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், படித்த ஆண், பெண், திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் புதிதாக தொழில் துவங்க, தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் வாயிலாக, கடனுதவி வழங்கப்படுகிறது.நடப்பு ஆண்டில், 24 பேருக்கு, 2.37 கோடி ரூபாய் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆர்வமுடையோர், www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.இரு திட்டங்களிலும் கூடுதல் விபரங்கள் பெற காக்களூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம், என, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE