தரமான விதை உற்பத்தி: 'அட்மா' சார்பில் பயிற்சி

Added : மே 13, 2022
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு 'அட்மா' சார்பில் தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு வட்டாரம் கரப்பாடியில், 'அட்மா' திட்டம் சார்பில் தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பில், விதைச்சான்று அலுவலர் நந்தினி பங்கேற்று,

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு 'அட்மா' சார்பில் தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பொள்ளாச்சி வடக்கு வட்டாரம் கரப்பாடியில், 'அட்மா' திட்டம் சார்பில் தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை சார்பில், விதைச்சான்று அலுவலர் நந்தினி பங்கேற்று, பயிற்சியளித்தார்.பயிற்சியில், தரமான விதை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், விதைப் பண்ணை அமைக்கும் முறைகள், பண்ணையில் மண் வளத்தை பேணுதல், பிற ரக விதைக் கலப்பை கண்டறிந்து நீக்குதல், விதை மாதிரி எடுத்து அதன் தரத்தை பரிசோதித்தல், தரமான விதைக்கு சான்று அட்டை பொருத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளை எடுத்துக் கூறினார்.மேலும், அங்ககச் சான்று பெறுதல் மற்றும் அதன் பயன்கள் குறித்து தெரிவித்தார். பயிற்சியில், கரப்பாடி மற்றும் சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X