ஜமாபந்தி நிகழ்ச்சி நடத்த அலுவலர்கள் நியமனம்

Added : மே 13, 2022
Advertisement
திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்ட தாலுகாக்களில், 'ஜமாபந்தி' எனப்படும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடத்த, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ஜமாபந்தி அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.தமிழக வருவாய் துறை, ஆண்டுதோறும், ஆண்டு பசலி வருவாய் தீர்வாயத்தை, ஒவ்வொரு தாலுகாவிலும் நடத்துகிறது.இந்நிகழ்ச்சியில், கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்படும். பொதுமக்கள், பட்டா

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு மாவட்ட தாலுகாக்களில், 'ஜமாபந்தி' எனப்படும் வருவாய் தீர்வாய நிகழ்ச்சி நடத்த, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், ஜமாபந்தி அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
தமிழக வருவாய் துறை, ஆண்டுதோறும், ஆண்டு பசலி வருவாய் தீர்வாயத்தை, ஒவ்வொரு தாலுகாவிலும் நடத்துகிறது.இந்நிகழ்ச்சியில், கிராம கணக்குகள் தணிக்கை செய்யப்படும். பொதுமக்கள், பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு மனு அளிப்பர்.கொரோனா தொற்று பரவலால், இரு ஆண்டுகளாக, தாலுகா அலுவலகத்தில் நேரடியாக நடத்தாமல், இணையவழியில் நடத்தப்பட்டது.

தற்போது, நேரடியாக நடத்தப்பட உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், 1431ம் பசலி ஆண்டிற்கான, வருவாய் தீர்வாயம், மே 31ம் தேதி துவங்கி, ஜூன் 16ம் தேதி வரை நடக்கிறது.மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், தீர்வாயம்நடத்தும் அலுவலர்களை, தற்போது நியமித்துஉள்ளார்.

வண்டலுார் தாலுகாவில், கலெக்டர் நடத்துகிறார்.மதுராந்தகம் தாலுகாவில், மாவட்ட வருவாய் அலுவலர்; செங்கல்பட்டு தாலுகாவில், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்; திருக்கழுக்குன்றம் தாலுகாவில், செங்கல்பட்டு பொறுப்பு சப் - கலெக்டர் நடத்துகின்றனர்.
திருப்போரூர் தாலுகாவில், செங்கல்பட்டு கலால் உதவி ஆணையர்; செய்யூர் தாலுகாவில், மதுராந்தகம் வருவாய் கோட்ட அலுவலர் நடத்துகின்றனர்.தாம்பரம் தாலுகாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர்; பல்லாவரம் தாலுகாவில், தாம்பரம் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோர், ஜமாபந்தி நடத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X