கட்டடங்களில் ஆக்கிரமித்த விளம்பர பேனர்கள் அகற்றம் | Dinamalar

கட்டடங்களில் ஆக்கிரமித்த விளம்பர பேனர்கள் அகற்றம்

Added : மே 13, 2022 | |
திருமழிசை:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, திருமழிசை பேரூராட்சியில் நெடுஞ்சாலையோர கட்டடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை பேரூராட்சி. இப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் உள்ள உயரமான கட்டடங்கள், மொபைல் போன் கோபுரங்கள் மீது விளம்பர பேனர்கள், அனுமதியின்றி
 கட்டடங்களில் ஆக்கிரமித்த விளம்பர பேனர்கள் அகற்றம்

திருமழிசை:நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, திருமழிசை பேரூராட்சியில் நெடுஞ்சாலையோர கட்டடங்களில், அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை பேரூராட்சி. இப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் உள்ள உயரமான கட்டடங்கள், மொபைல் போன் கோபுரங்கள் மீது விளம்பர பேனர்கள், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திருமழிசை பகுதியில் நெடுஞ்சாலையோர கட்டடங்கள் மீது வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. இவை, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X