புகார் பெட்டி: திருவள்ளூர்

Added : மே 13, 2022
Advertisement
செருக்கனுார் பெயர் பலகைமாற்ற வேண்டுகோள்திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், செருக்கனுார் செல்லும் சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளது.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், ஊர் பெயர் எழுதி, விளம்பர பலகைகள் வைத்துள்ளனர். இதை முறையாக பராமரிக்காததால், செருக்கனுார் விளம்பர
 புகார் பெட்டி: திருவள்ளூர்

செருக்கனுார் பெயர் பலகைமாற்ற வேண்டுகோள்
திருத்தணியில் இருந்து கே.ஜி.கண்டிகை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், செருக்கனுார் செல்லும் சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் உள்ளது.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், ஊர் பெயர் எழுதி, விளம்பர பலகைகள் வைத்துள்ளனர். இதை முறையாக பராமரிக்காததால், செருக்கனுார் விளம்பர பலகையில் எழுத்துகள் மங்கியுள்ளன.இதனால், செருக்கனுார் செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், புதிய விளம்பர பலகை வைக்க வேண்டும்.
-எஸ்.வெங்கடேசன், செருக்கனுார்.
வேகத்தடைக்கு வண்ணம்பூச வேண்டியது அவசியம்
திருத்தணி - சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்களின் வேகம் குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் பள்ளி போன்ற இடங்களில், நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை அமைத்துள்ளனர்.திருத்தணி அடுத்த அகூர் பகுதியில் இருந்து கே.ஜி.கண்டிகை, பீரகுப்பம் வரை, 10க்கும் மேற்பட்ட இடங்களில் நெடுஞ்சாலைத் துறையினர் வேகத்தடை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால், வெள்ளை வண்ணம் பூசப்படாததால், வேகத்தடை இருப்பது தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி தவிக்கின்றனர். நெடுஞ்சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வண்ணம் அடிக்க வேண்டும். மேலும், ஒளிரும் விளக்கு பட்டை அமைக்க வேண்டும்
கே.கிரிதரன், கே.ஜி.கண்டிகை.
வாகனங்கள் நிறுத்துவதைமுறைப்படுத்த கோரிக்கை
திருவாலங்காடு சன்னிதி தெருவில், இந்தியன் வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி மற்றும் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கவும், செலுத்தவும் தினமும் 300க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.வாடிக்கையாளர்கள் தங்களின் இருசக்கர வாகனத்தை, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையிலேயே நிறுத்தி செல்கின்றனர். இதனால், நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, வாகனங்கள் தாறுமாறாக நிறுத்துவதை முறைப்படுத்த வேண்டும்.
வி.எஸ்.டில்லிபாபு, திருவாலங்காடு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X