மாடு கடத்திய இருவர் கைது

Added : மே 13, 2022
Advertisement
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த பாரேரி பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி மாரியம்மாள், 38. இருவரும் கூலி தொழிலாளி. நான்கு கறவை மாடுகள் வைத்துள்ளனர்.நேற்று முன்தினம், வீட்டின் பின்புறம் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த ஒரு மாடு காணவில்லை. இதற்கிடையில், பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில், பல்லாவரம் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, 'குட்டி யானை' வாகனத்தில்

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த பாரேரி பகுதியைச் சேர்ந்த ராஜா மனைவி மாரியம்மாள், 38. இருவரும் கூலி தொழிலாளி. நான்கு கறவை மாடுகள் வைத்துள்ளனர்.
நேற்று முன்தினம், வீட்டின் பின்புறம் மேய்ச்சலுக்கு கட்டப்பட்டிருந்த ஒரு மாடு காணவில்லை. இதற்கிடையில், பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் பகுதியில், பல்லாவரம் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, 'குட்டி யானை' வாகனத்தில் மாடு கடத்தி வந்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த வேலா மகன் கலையரசன், 26; செல்வராஜ் மகன் பரமசிவன், 19, ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர்.
விசாரணையில், திருநீர்மலை பகுதியில் மாட்டிறைச்சி கடை வைத்துள்ள கலையரசன், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து மாட்டை கடத்தி வந்தது தெரிந்தது. சங்கர் நகர் போலீசார், இருவரையும் கைது செய்து, மீட்கப்பட்ட மாட்டை மறைமலை நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X