கரிய மாணிக்க பெருமாள் கோவிலில்

Added : மே 13, 2022 | |
Advertisement
ஊத்துக்கோட்டை:கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், வார்ஷிக பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று, கோலாகலமாக துவங்கியது.ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது, கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில்.பழமை வாய்ந்த இக்கோவிலில் நடக்கும் விழாக்களில், சித்திரை மாதம், 10 நாட்கள் நடைபெறும் வார்ஷிக பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது.இவ்விழா, நேற்று
 கரிய மாணிக்க பெருமாள் கோவிலில்

ஊத்துக்கோட்டை:கரிய மாணிக்க பெருமாள் கோவிலில், வார்ஷிக பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று, கோலாகலமாக துவங்கியது.
ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் உள்ளது, கமலவல்லி நாயிகா சமேத கரியமாணிக்க பெருமாள் கோவில்.பழமை வாய்ந்த இக்கோவிலில் நடக்கும் விழாக்களில், சித்திரை மாதம், 10 நாட்கள் நடைபெறும் வார்ஷிக பிரம்மோற்சவ விழா சிறப்பு வாய்ந்தது.
இவ்விழா, நேற்று காலை 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், த்வஜ பிரதிஷ்டை, பேரிதாடனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.மாலை 5:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து, யாளி வாகனத்தில் உற்சவர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 21ம் தேதி வரை விழா நடைபெறும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X