ரூ.4 கோடி மதிப்புள்ள செம்மரங்கள பறிமுதல்

Added : மே 13, 2022
Advertisement
நகரி:புத்துார் அருகே சென்னைக்கு கடத்துவதற்காக வேனில் கொண்டுவரப்பட்ட, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர்.திருப்பதி பகுதியில் இருந்து சென்னைக்கு செம்மரங்கள் கடத்தப்படுவதாக, புத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பதி எஸ்.பி., பரமேஸ்வர ரெட்டி உத்தரவுப்படி, புத்துார், வடமால் பேட்டையை அடுத்த

நகரி:புத்துார் அருகே சென்னைக்கு கடத்துவதற்காக வேனில் கொண்டுவரப்பட்ட, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக ஐந்து பேரை கைது செய்தனர்.
திருப்பதி பகுதியில் இருந்து சென்னைக்கு செம்மரங்கள் கடத்தப்படுவதாக, புத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பதி எஸ்.பி., பரமேஸ்வர ரெட்டி உத்தரவுப்படி, புத்துார், வடமால் பேட்டையை அடுத்த எஸ்.வி.புரம் டோல்கேட் அருகே, போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது திருப்பதியில் இருந்து, சென்னை நோக்கி சென்ற கார், அதற்கு பின்னால் வந்த டெம்போ வேன் ஆகியவற்றை சோதனையிட்டனர். டெம்போ வேனில், 191 செம்மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. காரில் வந்தவர்கள் செம்மரங்களை கடத்தி வந்ததும் தெரிந்தது. செம்மரங்களை போலீசார் கைப்பற்றினர்.
காரில் வந்தவர்களில், கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும், சென்னையை சேர்ந்த செந்தில்குமார், 30, அவரது கூட்டாளிகள் நாகராஜ், 29, சாரங்கபாணி, 32, நசீர்பாஷா, 35, முத்துராமன், 34, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்கள், 4 கோடி ரூபாய் மதிப்புடையது. இத்தகவலை நாராயணவனம் போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X