திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அருகே, அரசு பேருந்து மீது கார் மோதியதில், கல்லுாரி மாணவர் இறந்தார்.
திருக்கழுக்குன்றம், தேசுமுகிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் கபிலன், 21. செங்கல்பட்டு முன்னாள் தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் தமிழ்மணியின் மகள் வயிற்று பேரன்.தாம்பரம் தனியார் கல்லுாரியில், எம்.ஏ., பொது நிர்வாகம், முதலாம் ஆண்டு படித்தார்.
நேற்று காலை கல்லுாரி செல்ல, திருக்கழுக்குன்றத்திலிருந்து, 'மாருதி ஸ்விப்ட்' காரை ஓட்டிச் சென்றார்.திருக்கழுக்குன்றம் அடுத்த, கீரப்பாக்கம் பகுதியில், 7:30 மணிக்கு கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், கல்பாக்கம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் மோதியது. இதில் கார் உருக்குலைந்து, அங்கேயே கபிலன் உயிரிழந்தார்.திருக்கழுக்குன்றம் போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பேருந்தின் முன்புற பக்கவாட்டில், கார் சிக்கிய நிலையில், பிற வாகனங்கள் கடக்க இயலாமல், அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. போலீசார், கிரேன் வாகனத்தை வரவழைத்து, காரை அகற்றினர். தீ விபத்து ஏற்படாமல் தவிர்க்க, தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE