அறிவித்த சம்பளம் மாசமாகியும் கிடைக்கல! விரக்தியில் 'டான்டீ' தொழிலாளர்கள்

Added : மே 13, 2022
Advertisement
வால்பாறை;முதல்வர் அறிவித்த குறைந்தபட்சக்கூலி கிடைக்காததால், தமிழக டான்டீ தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் குன்னுார், கூடலுார், சேரம்பாடி உள்ளிட்ட இடங்களில், தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் (டான்டீ), 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.தேயிலை தொழிலாளர்களுக்குகுறைந்தபட்ச

வால்பாறை;முதல்வர் அறிவித்த குறைந்தபட்சக்கூலி கிடைக்காததால், தமிழக டான்டீ தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் குன்னுார், கூடலுார், சேரம்பாடி உள்ளிட்ட இடங்களில், தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் (டான்டீ), 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
தேயிலை தொழிலாளர்களுக்குகுறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி, தினக்கூலியாக, 425.40 ரூபாய் வழங்க தமிழக அரசு, கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 18ம் தேதி அரசாணை வெளியிட்டது. ஆனால், ஒன்பது மாதங்களுக்கு மேலாகியும் இன்று வரை அரசு அறிவித்த சம்பளம் வழங்கவில்லை. இதனால், டான்டீ தொழிலாளர்கள் விரக்தியடைந்துள்ளனர்.டான்டீ தொழிலாளர்கள் கூறியதாவது:தேயிலை தோட்டத்தில் தினக்கூலியாக, 350.97 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு அறிவித்த சம்பளம் இன்று வரை வழங்கவில்லை.

இதனிடையே, அரசு அறிவித்துள்ள சம்பளம் வழங்கப்படுவதற்கு முன், பேச்சு நடத்தி தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு, இடைக்கால ஒப்பந்த அடிப்படையில், தற்போது, 401.60 ரூபாய் தினக்கூலியாக வழங்கப்படுகிறது.ஆனால், 'டான்டீ' தொழிலாளர்களுக்கு மட்டும் சம்பள உயர்வு கிடைக்கவில்லை. தமிழக அரசு 'டான்டீ' தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியாக, 425.40 ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.
போராட்டத்துக்கு ஆயத்தம்
சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலாளர் பரமசிவம், 'டான்டீ' நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில், 'தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ளபடி குறைந்தபட்ச தினக்கூலியாக, 425.40 ரூபாய் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 16ம் தேதி சின்கோனா 'டான்டீ' அலுவலகம் முன், தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X