கோழி பிடிக்க முயன்ற ஆண் சிறுத்தை பலி

Added : மே 13, 2022
Advertisement
வால்பாறை;ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது வால்பாறை வறட்டுப்பாறை எஸ்டேட். இங்குள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் டீ கடை நடத்தி வருபவர் உஸ்மான். இவரது கடைக்கு பின்பக்கம் உள்ள கோழிக்கூண்டில், கோழியை பிடிக்க சென்ற, ஆண் சிறுத்தை ஒன்று கூண்டு அருகே இறந்து கிடந்தது.தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று,
 கோழி பிடிக்க முயன்ற ஆண் சிறுத்தை பலி

வால்பாறை;ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது வால்பாறை வறட்டுப்பாறை எஸ்டேட். இங்குள்ள நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் டீ கடை நடத்தி வருபவர் உஸ்மான். இவரது கடைக்கு பின்பக்கம் உள்ள கோழிக்கூண்டில், கோழியை பிடிக்க சென்ற, ஆண் சிறுத்தை ஒன்று கூண்டு அருகே இறந்து கிடந்தது.தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த சிறுத்தையை மீட்டு, பிரேத பரிசோதனை செய்தனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கூண்டில் இருந்த கோழியை பிடிக்க சிறுத்தை சென்றுள்ளது. அப்போது சிறுத்தையின் இடது கால்நகம், வலையில் சிக்கி வெளியே வர முடியாமல் நீண்ட நேரம் போராடிய நிலையில் தலையில் அடிபட்டதால் இறந்திருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு பின், சிறுத்தை இறப்பிற்கு காரணம் தெரியவரும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X