பொள்ளாச்சி:பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், நேற்று நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை, 287 பேர் எழுதவில்லை.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த, 5ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு நேற்று நடந்தது.அதில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், தேர்வு எழுத ஆண்கள் - 2,010, பெண்கள் - 2,723 என, மொத்தம், 4,733 மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அவர்களில், ஆண்கள் - 1,894, பெண்கள் - 2,552, என, மொத்தம், 4,446 பேர் தேர்வு எழுதினர். ஆண்கள் - 116, பெண்கள் - 171, என, மொத்தம், 287 பேர் தேர்வு எழுதவில்லை.* வால்பாறையில் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வசதியாக, மூன்று தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. நேற்று வேதியியல், கணக்குப்பதிவியல் தேர்வுகள் நடந்தன. மொத்தம், 499 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்; 20 பேர் 'ஆப்சென்ட்' ஆன நிலையில், 479 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேட்டி வருமாறு:மீரா: வேதியியல் பாடப்பிரிவில் அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. குறிப்பாக, 1, 2, மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் மிக வும் எளிதாக இருந்தன. இதனால், தேர்வை மகிழ்ச்சியாக எழுதினேன். தேர்வில், நிச்சயம் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.ரேஷ்மா: வேதியியல் தேர்வில், எதிர்பார்த்தது போல எல்லா வினாக்களும் எளிதாக கேட்கப்பட்டிருந்தன. வினாத்தாளை வாங்கி படித்ததும் மகிழ்ச்சியடைந்தேன். ஆசிரியர்கள் கற்பித்த பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், எவ்வித தயக்கமும் இன்றி தேர்வை விரைவாகவும், தெளிவாகவும் எழுதினேன். வேதியியல் தேர்வை பொறுத்தவரை முழுமதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE