ஜி.எச்., முன் ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Added : மே 13, 2022
Advertisement
வாகனங்களால் தொல்லைபொள்ளாச்சி பழைய இரும்பு மார்க்கெட் எதிரே, வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.- குமார், பொள்ளாச்சி.பணியை வேகப்படுத்துங்க!பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, 'சென்டர் மீடியன்' அமைக்கும் பணியை விரைந்து

வாகனங்களால் தொல்லை
பொள்ளாச்சி பழைய இரும்பு மார்க்கெட் எதிரே, வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குபடுத்தி, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்.- குமார், பொள்ளாச்சி.


பணியை வேகப்படுத்துங்க!
பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, 'சென்டர் மீடியன்' அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். தாமதமாக பணி செய்வதால் விபத்துகள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் பணியை வேகப்படுத்த வேண்டும்.- கார்த்திகேயன், பொள்ளாச்சி.


விபத்து அபாயம்
பொள்ளாச்சி, ஆர்.ஆர்.தியேட்டர் ரோட்டில், சாக்கடை கால்வாய் அருகே, விபத்து ஏற்படுத்தும் வகையில், கட்டுமான கழிவு மற்றும் அம்மிக்கல் போடப்பட்டுள்ளது. இதனால், விபத்துக்கு வழிவகுக்கிறது. அவற்றை விரைவில் அகற்ற வேண்டும்.- திவாகர், பொள்ளாச்சி.


வாகனங்களில் அத்துமீறல்
பொள்ளாச்சி நகரப் பகுதியில், வாகனங்களில் சாகச பயணம் மேற்கொள்ேவாரால் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை போலீசாரும் கண்டுகொள்வதில்லை. வாகனங்களில் அத்துமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கிருஷ்ணன், பொள்ளாச்சி.


நடவடிக்கை எடுப்பாங்களா?
கோட்டூர் அரசு மருத்துவமனை முன், ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்துகள் ஏற்படுகிறது. ரோட்டை ஆக்கிரமிக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மருத்துவமனை முன், மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வினோத், கோட்டூர்.


கண்காணிப்பு செய்யணும்!
பொள்ளாச்சி நகரப்பகுதியில், போலீசார் முறையாக வாகன சோதனை செய்யாததால், இருசக்கர வாகனங்களில், அத்துமீறி மூன்று பேர் பயணிக்கின்றனர். மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.- யமுனா, பொள்ளாச்சி.


ரோடு போடணும்
பொள்ளாச்சி, மாட்டுச்சந்தை செல்லும் ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலத்தில், சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. மண் ரோட்டை, தார் ரோடாக மேம்படுத்த வேண்டும்.- காளிதாசன், பொள்ளாச்சி.


அடிப்படை வசதியில்லை
கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், போதிய அளவு இருக்கைகள் இல்லாததால், மக்கள் சிரமப்படுகின்றனர். இருக்கைகள் அமைத்து, மின் விளக்குகள் பொருத்தி, மக்களுக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.- வடிவேல், கிணத்துக்கடவு.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X