மாமண்டூர் பயண வழி உணவகம் திறப்பு: பயணியர் மகிழ்ச்சி

Added : மே 13, 2022
Advertisement
செங்கல்பட்டு:மாமண்டூர் பயண வழி உணவகம், திறக்கப்பட்டதால், பேருந்து பயணியர் ஆர்வமுடன், உணவு, தின்பண்டங்களை வாங்கினர்.செங்கல்பட்டு அடுத்த மாமண்டூரில் அரசின் பயண வழி உணவகம் உள்ளது. இங்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், போக்குவரத்து கழக அதிகாரிகள், உணவகத்தை ஆய்வு செய்தனர். அதில், பயணியருக்கு தரமற்ற உணவு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, உணவகத்தை மூட அதிகாரிகள்
 மாமண்டூர் பயண வழி உணவகம் திறப்பு: பயணியர் மகிழ்ச்சி

செங்கல்பட்டு:மாமண்டூர் பயண வழி உணவகம், திறக்கப்பட்டதால், பேருந்து பயணியர் ஆர்வமுடன், உணவு, தின்பண்டங்களை வாங்கினர்.
செங்கல்பட்டு அடுத்த மாமண்டூரில் அரசின் பயண வழி உணவகம் உள்ளது. இங்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், போக்குவரத்து கழக அதிகாரிகள், உணவகத்தை ஆய்வு செய்தனர். அதில், பயணியருக்கு தரமற்ற உணவு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, உணவகத்தை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதனால், கடந்த நான்கு மாதங்களாக உணவகம் மூடப்பட்டிருந்தது.

இது, தொலைதுார பேருந்து பயணியருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.இதன் காரணமாக பேருந்து பயணியர், மாமண்டூர் பயண வழி உணவகத்தை திறக்கும்படி, போக்குவரத்து கழகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து பயணியர் வழி உணவகம், புதுப்பிக்கும் பணி நடந்தது வந்தது. இரு தினங்களுக்கு முன் முடிவடைந்து, நேற்று, உணவகம் திறக்கப்பட்டது.அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பேருந்தில் இருந்து இறங்கிய பயணியர், டீ, காபி, கூல்டிரிங்க்ஸ், சாப்பாடு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X