தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில், மின் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 37 ஆயிரம் மின் விளக்குகளை, 49 கோடி ரூபாய் செலவில், எல்.இ.டி., விளக்குகளாக மாற்றும் பணி விரைவில் துவங்க உள்ளது.
புறநகர் ஊராட்சிகளை இணைத்து, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியில், 70 வார்டுகள் உள்ளன.இம்மாநகராட்சியில், ௯ லட்சத்து, 93 ஆயிரத்து, 344 கி.மீ., நீள சாலைகள் உள்ளன. இச்சாலைகளில் மொத்தம், 42 ஆயிரத்து 902 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.இதில், 19 ஆயிரத்து, 504 டியூப் லைட்டுகள்-, 8,362 சி.எப்.எல்., பல்புகளும் அடங்கும். இவற்றை பராமரிக்கும் பணி, தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
ஒப்பந்ததாரர்கள், விளக்குகளை முறையாக பரமாரிப்பதில்லை என, குற்றச்சாட்டும் உள்ளது. குறிப்பாக, பல்லாவரம், பம்மல் பகுதிகளில் ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம், விளக்குகளை முறையாக பராமரிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது.பல்லாவரம் முதல் குரோம்பேட்டை வரை, 50க்கும் மேற்பட்ட விளக்குகள் எரியாமல் உள்ளன.பல்லாவரம்- - துரைப்பாக்கம் சாலையில் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாலததால், குற்றங்கள் நடப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், மாநகராட்சிக்கு மின் கட்டணமும் அதிகரித்துள்ளதால், மின் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.இது குறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், மின் கட்டணத்தை குறைக்க, அனைத்து விளக்குகளையும், எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற திட்டமிட்டனர்.இந்த நிலையில், மாநகராட்சி மேயராக பதவியேற்ற வசந்தகுமாரி, முதல் கையெழுத்தாக இதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
தொடர்ந்து கணக்கெடுப்பு பணி துவங்கியது.அப்பணி முடிந்து, 49 கோடி ரூபாய் செலவில், 37 ஆயிரத்து, 803 விளக்குகளை, எல்.இ.டி., விளக்குகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான 'டெண்டர்' கோரப்பட்டு, பணிகள் துவங்கும் என, மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE