வியாபாரிகளுக்கு எச்சரிக்கை : கூடுதல் விலைக்கு உரம் விற்க கூடாது

Added : மே 13, 2022
Advertisement
சூலூர்:"அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் காய்கறிகள், மக்காச்சோளம், வாழை, மற்றும் தென்னை சாகுபடி தீவிரமாக நடக்கிறது. ஜல்லிப்பட்டி, செஞ்சேரி மலை, செலக்கரச்சல், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உரக்கடைகளில், தங்களுக்கு தேவையான உரங்களை

சூலூர்:"அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்," என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் காய்கறிகள், மக்காச்சோளம், வாழை, மற்றும் தென்னை சாகுபடி தீவிரமாக நடக்கிறது. ஜல்லிப்பட்டி, செஞ்சேரி மலை, செலக்கரச்சல், சுல்தான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உரக்கடைகளில், தங்களுக்கு தேவையான உரங்களை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வட்டாரத்தில் உள்ள உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விதிகளை மீறும் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இருப்பு இருக்கும் உரங்களை சரி பார்த்தனர்.இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:இருப்பு மற்றும் விலைப்பட்டியலை அனைவருக்கும் தெரியும் படி வைக்க வேண்டும். அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது கண்டுபிடிக்கப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இடு பொருட்களுக்கு உரிய பில் வழங்க வேண்டும். யூரியா உள்ளிட்ட உரங்களை விற்பனை செய்யும் போது, பிற வேளாண் இடுபொருட்களை வாங்க வற்புறுத்தக் கூடாது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X