வால்பாறை:தியானத்தின் வாயிலாக மட்டுமே இறைவனை காண முடியும் என, பிரம்ம குமாரிகள் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர்.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, மண்டல பூஜை நடக்கிறது. விழாவில், வால்பாறை, ஆனைமலை பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பில், கைலாசம், முருகனின் ஆறுபடை வீடுகள் குறித்து, குழந்தைகள் இறைவன் வேடமணிந்து கலை நிகழ்ச்சி நடத்தினர்.விழாவில், பிரம்மகுமாரிகள், உமா, கற்பகம் ஆகியோர் பக்தர்களிடையே ஆன்மிக உரை நிகழ்த்தினர். அவர்கள் பேசியதாவது: தந்தை சிவனுக்கே உபதேசம் செய்தவர் முருகன்.
அவரின் ஆறுபடை வீடுகளை குறிக்கும் வகையில், குழந்தைகள் இறைவன் வேடமணிந்துள்ளனர். தியானத்தின் வாயிலாக மட்டுமே இறைவனை காண முடியும்.உலகத்தை கட்டிக்காக்கும் இறைவன் எல்லோருடைய இல்லத்திலும் குடி கொண்டிருக்கிறார். அவரை எங்கும் தேட வேண்டியதில்லை. நாள் தோறும் வீட்டில் விளக்கேற்றி, சிவனை வழிபட்டால், துன்பம் அகலும். மனம் துாய்மை அடையும். கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அம்மனை வழிபடுவதன் வாயிலாக மகிழ்ச்சி பொங்கும். இவ்வாறு, பேசினர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement