மொஹாலி வெடிகுண்டு தாக்குதல் முக்கிய குற்றவாளி கைது

Added : மே 13, 2022 | |
Advertisement
மொஹாலி:பஞ்சாபில், உளவுத்துறை அலுவலகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியவரை, போலீசார் கைது செய்துள்ளனர். இவர், பாக்., பயங்கரவாதி ஒருவரின் நெருங்கிய கூட்டாளி என்பது தெரிய வந்துள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொஹாலியில் உள்ள மாநில உளவுத்துறை தலைமை அலுவலகத்தின் மூன்றாவது தளம் மீது, சமீபத்தில் கையெறி குண்டு வீசப்பட்டது.

மொஹாலி:பஞ்சாபில், உளவுத்துறை அலுவலகம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியவரை, போலீசார் கைது செய்துள்ளனர். இவர், பாக்., பயங்கரவாதி ஒருவரின் நெருங்கிய கூட்டாளி என்பது தெரிய வந்துள்ளது.
பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, மொஹாலியில் உள்ள மாநில உளவுத்துறை தலைமை அலுவலகத்தின் மூன்றாவது தளம் மீது, சமீபத்தில் கையெறி குண்டு வீசப்பட்டது. அப்போது, அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், அந்த தாக்குதல் நடத்திய நபரை, போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

இது குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., பாவ்ரா கூறியதாவது:உளவுத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, லக்பிர் சிங் லண்டா என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர், அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஹரிந்தர் சிங் ரிண்டாவின் நெருங்கிய கூட்டாளி. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X