பழங்குடியினருக்கு அனுபவ பட்டா: வனத்துறை ஆய்வுக்கு பின் தீர்மானம்

Added : மே 13, 2022
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்டத்தில், மூன்று பழங்குடியின குடியிருப்புகளை சேர்ந்த, 48 பேருக்கு அனுபவ உரிமை பட்டா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பழங்குடியின மக்களுக்கு அனுபவ உரிமை பட்டா வழங்குவதற்கானஆலோசனை கூட்டம் நடந்தது.சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார். வனச்சரகர்கள் புகழேந்தி, மணிகண்டன், வெங்கடேஷ்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்டத்தில், மூன்று பழங்குடியின குடியிருப்புகளை சேர்ந்த, 48 பேருக்கு அனுபவ உரிமை பட்டா வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பழங்குடியின மக்களுக்கு அனுபவ உரிமை பட்டா வழங்குவதற்கானஆலோசனை கூட்டம் நடந்தது.சப் - கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ் தலைமை வகித்தார். வனச்சரகர்கள் புகழேந்தி, மணிகண்டன், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கடாசலம்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல தனி தாசில்தார் முருகேஷ் மற்றும்பழங்குடியின குடியிருப்புகளை சேர்ந்த மூப்பன்கள், பழங்குடியின மக்கள் சார்பில் குழு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆனைமலை புலிகள் காப்பகத்தில், நெடுங்குன்றா, உடுமன்பாறை, பரமன்கடவு உள்ளிட்ட பழங்குடியினகுடியிருப்புகளில் வசிப்பவர்களில், 533 பேருக்கு அனுபவ உரிமை பட்டா வழங்கப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து, சின்கோனா --- 21, காடம்பாறை - 11, கவர்க்கல் - 16 என, மொத்தம், 48 பேருக்கு அனுபவ உரிமை பட்டா வழங்கப்பட உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.வனத்துறை தரப்பில் மீண்டும் ஒரு முறை ஆய்வு செய்து தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.அவர்களது ஆய்வு முடிந்த பின், கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி மக்களுக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X