பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, குடிநீர் முறையாக வினியோகிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ராமபட்டணம் ஊராட்சி பொன்மலையூரில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக, குடிநீர் முறையாக வினியோகம் இல்லை. அதிருப்தியடைந்த மக்கள், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், தாவளம் பிரிவு அருகே காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் கூறியதாவது:பொன்மலையூர் கிராமத்தில் கடந்த, 10 நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. உள்ளூரில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரும், மோட்டார் பழுது காரணமாக வினியோகிக்கவில்லை.குடிநீர் கிடைக்காததால், அலைமோத வேண்டியுள்ளது. இதுகுறித்து, பல முறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.இவ்வாறு, தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த தாலுகா போலீசார், மக்களிடம் பேச்சு நடத்தி, குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர். பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதித்தது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE