பொள்ளாச்சி:கோவை மாவட்டத்தில், '108' ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர், ஓட்டுனர் பணியிடங்களுக்கு, கோவையில் இன்று நேர்முக தேர்வு நடக்கிறது.பொள்ளாச்சி, '108' ஆம்புலன்ஸ் மேலாளர் கோகுலகிருஷ்ணன் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், '108' ஆம்புலன்சில், மருத்துவ உதவியாளர், டிரைவர் பணியிடத்துக்கான நேர்முக தேர்வு, கோவை ரயில் ஸ்டேஷன் அருகே, தாமஸ் ஹாலில் இன்று (14ம் தேதி) காலை, 11:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கிறது.மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு அடிப்படை தகுதிகளான, 19 --- 30 வயதுக்குள்ளும், உரிய கல்வித்தகுதியுடன் இருக்க வேண்டும்.டிரைவர் பணியிடத்துக்கு, 24 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 12ம் வகுப்பு தேர்ச்சி, அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் 'பேட்ஜ்' வாகன உரிமம் எடுத்து, ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். உயரம், 162.5 செ.மீ., குறையாமல் இருக்க வேண்டும்.விண்ணப்பதாரர்கள், கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்க்க நேர்முகத்தேர்வுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 73977 24837 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE