உடுமலை:உடுமலை பகுதி விதை விற்பனை நிலையங்களில், விதை ஆய்வுத்துறை அதிகாரிகள் குழு திடீர் ஆய்வு செய்தது. இதில், குறைபாடு கண்டறியப்பட்ட, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.உடுமலை பகுதியில், பருவ மழை பெய்து வருவதால், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர்.விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை செய்வதை உறுதி செய்யும் வகையில், கோவை விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் தலைமையில், ஊட்டி, அன்னூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை விதை ஆய்வாளர்களை கொண்ட குழுவினர், விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது, விதை உரிமம் மற்றும் விதை இருப்பு குறித்த விபரங்கள், விவசாயிகளின் கண்களில் படும்படி வைக்கப்பட்டுள்ளதா, கொள்முதல் செய்யப்பட்டுள்ள விதைகளின் வரவு, இருப்பு மற்றும் விற்பனை, குவியல் எண், முறைப்புத்திறன் அறிக்கை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியதாவது:விதை விற்பனை நிலையங்களில், ஒவ்வொரு விதை ரகத்திற்கும் பதிவெண் சான்றிதழ் மற்றும் அனைத்து விதை குவியல்களுக்கும் முளைப்புத்திறன் அறிக்கை பெற்றிருக்க வேண்டும். காலாவதியான விதைகளை விற்பனை செய்யக்கூடாது.சேமிப்புக்கிடங்கில் விதைகளை, உர இருப்புகளுடன் வைக்கக்கூடாது. காலாவதியான விதைகள் மற்றும் உரத்துடன் விதைகளை சேமிப்புக்கிடங்கில் வைத்து இருந்தால் அந்த விதை விற்பனை நிலையங்களுக்கு விதை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆய்வில், முளைப்புத்திறன் அறிக்கை மற்றும் பதிவு சான்றிதழ் அறிக்கை இல்லாமல், இருந்த மூன்று விதை குவியல்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது.விதை விபர அட்டையில் குறைபாடுகள் உள்ள விதைகளுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. விபர அட்டை குறைபாடுள்ள, விதை குவியல்களை விற்பனை செய்யக்கூடாது.கொள்முதல் மற்றும் விற்பனை பட்டியல்களை சரிவர பராமரிக்கப்படாத விற்பனை நிலையங்களுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இருப்பில் உள்ள விதைக்கும் விதை பதிவேட்டில் பதிவு செய்த விதைக்கும் வேறுபாடுகள் உள்ள விதை குவியல்களுக்கு விதை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.ஆய்வில், விதை விற்பனை நிலையங்களில், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள, ஏழு விதை குவியல்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டதோடு, விளக்கக்கடிதமும் கேட்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE