உத்திரமேரூர்- - சென்னைக்கு அதிகாலை பேருந்து வேண்டும்

Added : மே 13, 2022
Advertisement
உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் இருந்து, அதிகாலையில் சென்னைக்கு செல்லும் வகையில் அரசுப் பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உத்திரமேரூரை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், சென்னை புறநகர் பகுதியையொட்டி பணியாற்றுகின்றனர். இவர்கள் தினசரி, உத்திரமேரூரில் இருந்து, சென்னைக்கு

உத்திரமேரூர்,:உத்திரமேரூரில் இருந்து, அதிகாலையில் சென்னைக்கு செல்லும் வகையில் அரசுப் பேருந்து இயக்க பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்திரமேரூரை சுற்றி 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களை சேர்ந்த தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், சென்னை புறநகர் பகுதியையொட்டி பணியாற்றுகின்றனர். இவர்கள் தினசரி, உத்திரமேரூரில் இருந்து, சென்னைக்கு பேருந்து மூலம் செல்கின்றனர். முதல் சிப்ட் பணிக்கு செல்வோர், சென்னை புறநகர் பகுதிகளுக்கு, 6:00 மணிக்குள்சென்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது.
உத்திரமேரூரில் இருந்து, தாம்பரம் பகுதிக்கு 4:40 மணிக்குதான் முதல் பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தின் மூலம், சென்னைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றடைய முடியாத நிலை உள்ளது.இது குறித்து, உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த மருத்துவர் சோழன் கூறியதாவது:போக்குவரத்து பனிமனை உள்ள பகுதிகளில், மிக அதிகாலையில் பேருந்து இயக்கப்படுவது வழக்கம்.
ஆனால், உத்திரமேரரூரில் போக்குவரத்து பணிமனை இருந்தும், 4:40 மணிக்கு தான், தாம்பரம் செல்வதற்கான முதல் பேருந்து இயக்கப்படுகிறது. இப்பகுதிகளை சேர்ந்த பலர், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களாக, சென்னை புறநகர் பகுதிகளில் பணியாற்றுகின்றனர்.
இவர்களை போன்ற தொழிலாளர்கள், அதிகாலை 4:00 மணிக்குள் சென்னை சென்றாக வேண்டும் என்ற நிலை உள்ளது.எனவே, உத்திரமேரூரில் இருந்து, தாம்பரம் செல்ல 3:30 மணிக்குள் அரசு பேருந்து இயக்கிட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X