ஜி.எச்.,ல் ஆர்.டி., - பி.சி.ஆர்., ஆய்வு கூடம்: 'ரிசல்ட்' உடனே தெரியும்

Added : மே 13, 2022
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஆர்.டி., - பி.சி.ஆர்., (கொரோனா பரிசோதனை) ஆய்வு கூடம் அமைக்கும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கொரோனா பரிசோதனை அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு வந்தனர். இங்கு, மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பப்பட்டு வந்தன.இதனால், முடிவுகள் வர தாமதம் ஏற்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
 ஜி.எச்.,ல் ஆர்.டி., - பி.சி.ஆர்., ஆய்வு கூடம்: 'ரிசல்ட்' உடனே தெரியும்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஆர்.டி., - பி.சி.ஆர்., (கொரோனா பரிசோதனை) ஆய்வு கூடம் அமைக்கும் பணி நடக்கிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், கொரோனா பரிசோதனை அரசு மருத்துவமனையில் மேற்கொண்டு வந்தனர். இங்கு, மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பப்பட்டு வந்தன.இதனால், முடிவுகள் வர தாமதம் ஏற்பட்டது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முடிவுகள் தெரிவிக்க முடியாத நிலையில் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பரிசோதனை ஆய்வு கூடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், ஆர்.டி., - பி.சி.ஆர்., ஆய்வு கூடம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், பரிசோதனை ஆய்வு கூடம் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றன.தொடர்ந்து, இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடக்கிறது.
டாக்டர்கள் கூறியதாவது: அரசு மருத்துவமனையில், ஒரு கோடி மதிப்பில், ஆர்.டி. - பி.சி.ஆர்., பரிசோதனை ஆய்வு கூடம் அமைக்கப்படுகிறது. இந்த ஆய்வகத்துக்கு தேவையான இயந்திரங்கள் வந்துள்ளன. அவை தற்போது பொருத்தும் பணிகள் நடக்கிறது.இதற்கு, ஐ.சி.எம்.ஆர்., அங்கீகாரம் வாங்க முயற்சிகள் எடுக்கப்படுகிறது. அதன் பின், இங்கேயே பரிசோதனை செய்து உடனடியாக முடிவுகள் தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இங்கு, மைக்ரோ பயாலோஜிஸ்ட், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், லேப் டெக்னீசியன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும். விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு, டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X