ஊட்டி சுற்றுலா மையங்கள்; மலர் நாற்று விற்பனை அமோகம்

Added : மே 13, 2022
Advertisement
ஊட்டி:ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மலர் நாற்றுகளின் விற்பனை அமோகமாக நடக்கிறது.நீலகிரியில் கோடை விழா துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலர் நாற்றுகளை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்காக, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தோட்டக்கலைத்துறை
 ஊட்டி சுற்றுலா மையங்கள்;  மலர் நாற்று விற்பனை அமோகம்

ஊட்டி:ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், மலர் நாற்றுகளின் விற்பனை அமோகமாக நடக்கிறது.நீலகிரியில் கோடை விழா துவங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலர் நாற்றுகளை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதற்காக, தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் தோட்டக்கலைத்துறை வளாகத்தில், பல வண்ணங்களில், பல்வேறு ரக மலர் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. ஒரு மலர் நாற்றுக்கு, ரகத்திற்கு ஏற்றார் போல, 10 ரூபாய் முதல், விற்பனை செய்யப்படுகிறது.இதனை, சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி செல்வதால், விற்பனை அமோகமாக நடக்கிறது.
தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தாவரவியல் பூங்காவில், பல்வேறு இன்டோர் பிளான் விற்பனை அதிகரித்துள்ளது. ஒரு நாற்றுக்கு, 10 முதல், 110 ரூபாய் வரை மலர் தொட்டிக்கு ஏற்றார் போல, விற்பனை செய்யப்படுகிறது. மலர் கண்காட்சி நாட்களில், அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால், தனியாக விற்பனை அரங்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X