பழங்குடியினர் கிராமம்: ரூ.6 கோடியில் சாலை| Dinamalar

பழங்குடியினர் கிராமம்: ரூ.6 கோடியில் சாலை

Added : மே 13, 2022 | |
குன்னுார்:குன்னுார் உலிக்கல் பேரூராட்சியில், யானை பள்ளம், சின்னாலகோம்பை பழங்குடியின கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் உள்ளனர்.கிராமங்களுக்கு, சாலை வசதி இல்லாத நிலையில், கடந்த, 2019ல், மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட, 8 பழங்குடியினர், 17 மணி நேரத்திற்கு, பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதை தொடர்ந்து, அப்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
 பழங்குடியினர் கிராமம்:  ரூ.6 கோடியில் சாலை

குன்னுார்:குன்னுார் உலிக்கல் பேரூராட்சியில், யானை பள்ளம், சின்னாலகோம்பை பழங்குடியின கிராமத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியினர் உள்ளனர்.கிராமங்களுக்கு, சாலை வசதி இல்லாத நிலையில், கடந்த, 2019ல், மின்னல் தாக்கியதில் பாதிக்கப்பட்ட, 8 பழங்குடியினர், 17 மணி நேரத்திற்கு, பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதை தொடர்ந்து, அப்போதைய கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின்பேரில், சாலை பணிக்கு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 'கொரோனா' காரணமாக, 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த பணி, கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது, 600 மீட்டர் துாரம் மட்டும் பணி நடக்க வேண்டியுள்ளது.பழங்குடியின மக்கள் கூறுகையில்,'மீதமுள்ள பணிகளை, பருவ மழை காலம் துவங்கும் முன்பு நிறைவு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X