மணக்கோலத்தில்மணமகள் மயங்கி விழுந்து மரணம் விசாகப்பட்டினத்தில் அதிர்ச்சி

Added : மே 13, 2022
Advertisement
விசாகப்பட்டினம்:விசாகப்பட்டினத்தில் நடந்த திருமணம் ஒன்றில், தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகள் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த சுஜானா, 22, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவாஜி, 25, இருவருக்கும், 10ம் தேதி இரவு விசாகப்பட்டினத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அன்று மாலையில் மண்டபத்தில் ஏராளமான

விசாகப்பட்டினம்:விசாகப்பட்டினத்தில் நடந்த திருமணம் ஒன்றில், தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகள் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்த சுஜானா, 22, ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிவாஜி, 25, இருவருக்கும், 10ம் தேதி இரவு விசாகப்பட்டினத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. அன்று மாலையில் மண்டபத்தில் ஏராளமான உறவினர்கள், நண்பர்கள் குவிந்திருந்தனர். தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், மணமேடையில் சுஜானா மயங்கி சரிந்தார்.உறவினர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவ மனைக்கு துாக்கிச் சென்றனர்.

பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதை உறுதி செய்தனர். மணக்கோலத்தில் பிணமான பெண்ணைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறினர்.தகவல் அறிந்து வந்த போலீசார், சுஜானா உடலை ஆய்வு செய்வதற்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மணமகள் அறையில் சோதனை செய்த போது, சுஜானாவின் கைப்பையில் விஷத்தன்மை கொண்ட காய்கள் இருந்தன. திருமணத்தில் விருப்பம் இல்லாததால், சுஜானா தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X