17 இடங்களில் இன்று ரேஷன் குறைதீர் முகாம்

Added : மே 13, 2022
Advertisement
சென்னை, -ரேஷன் கார்டு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் குறைதீர் முகாம், சென்னையில் இன்று, 19 இடங்களில் நடக்கிறது.உணவு வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் உட்பட, 19 உணவு வழங்கல் மண்டல அலுவலகங்களில், இன்று குறைதீர் முகாம் நடக்கிறது.காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி

சென்னை, -ரேஷன் கார்டு தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் குறைதீர் முகாம், சென்னையில் இன்று, 19 இடங்களில் நடக்கிறது.உணவு வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுக்க, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் உட்பட, 19 உணவு வழங்கல் மண்டல அலுவலகங்களில், இன்று குறைதீர் முகாம் நடக்கிறது.காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், பொது மக்கள் பங்கேற்று, மேற்கண்ட பிரச்னைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களின் தரம், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் சேவை குறைபாடு உள்ளிட்டவை தொடர்பாகவும் புகார் அளிக்கலாம் என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X