சிறுமியை கடத்தியவருக்கு 'போக்சோ'

Added : மே 13, 2022 | |
Advertisement
பெரவள்ளூர், :பள்ளி சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தவர், 'போக்சோ'வில் கைதானார்.சென்னை கொளத்துார் அடுத்த குமரன் நகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் கார்த்திக், 35. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பேரண்ட பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்.சென்னை, பெரம்பூரிலுள்ள பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியுடன், கார்த்திக் நட்பாக பழகி உள்ளார்.

பெரவள்ளூர், :பள்ளி சிறுமியை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்தவர், 'போக்சோ'வில் கைதானார்.சென்னை கொளத்துார் அடுத்த குமரன் நகரிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் கார்த்திக், 35. இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா பேரண்ட பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்.சென்னை, பெரம்பூரிலுள்ள பள்ளியில் படிக்கும் 17 வயது மாணவியுடன், கார்த்திக் நட்பாக பழகி உள்ளார். கடந்த 9ம் தேதி அவரை கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர், பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.இது குறித்து விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் இரவு, இருவரையும் மீட்டு வந்தனர். சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்து, கார்த்திக்கை 'போக்சோ'வில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X