2 கட்டுமான நிறுவனங்களுக்கு வாரன்ட்: ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு| Dinamalar

2 கட்டுமான நிறுவனங்களுக்கு 'வாரன்ட்': ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவு

Added : மே 13, 2022 | |
சென்னை :வீடு ஒப்படைப்பு தாமதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு தர மறுக்கும் இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு, 'வாரன்ட்' பிறப்பிக்கலாம் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.குன்றத்துாரில் தனியார் நிறுவனம், 2012ல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிவித்தது. அதில் வீடு வாங்க, மோகனசுந்தரம் என்பவர் பணம் செலுத்தினார்.இதற்கான ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட

சென்னை :வீடு ஒப்படைப்பு தாமதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு தர மறுக்கும் இரண்டு கட்டுமான நிறுவனங்களுக்கு, 'வாரன்ட்' பிறப்பிக்கலாம் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.குன்றத்துாரில் தனியார் நிறுவனம், 2012ல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை அறிவித்தது. அதில் வீடு வாங்க, மோகனசுந்தரம் என்பவர் பணம் செலுத்தினார்.இதற்கான ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைக்கப்படவில்லை. இதனால், அவருக்கு இழப்பீடு வழங்க 2021ல், ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உத்தரவிட்டார்.இந்த உத்தரவை, அந்நிறுவனம் மதிக்கவில்லை. இது குறித்து மோகனசுந்தரம் மீண்டும் ஆணையத்தில் முறையிட்டார்.இதே போன்று, பள்ளிக்கரணையில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை, ஒரு தனியார் நிறுவனம், 2011ல் அறிவித்தது. இதில் வீடு வாங்க, டெய்சி கரோலின் என்பவர் பணம் செலுத்தி முன்பதிவு செய்தார். இவருக்கு ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட காலத்தில் வீடு ஒப்படைப்பதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.இவரது முறையீட்டை ஏற்ற ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர், இழப்பீடு வழங்க கட்டுமான நிறுவனத்துக்கு, 2021ல் உத்தரவிட்டார். இதன்படி அந்நிறுவனம் இழப்பீடு அளிக்காததால் டெய்சி கரோலின், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டார்.இந்த இரண்டு முறையீடுகள் மீதும் ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் சரவணன் தனித்தனியாக பிறப்பித்த உத்தரவு:ஆணைய உத்தரவுப்படி, மனுதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை என்பது உறுதியாகிறது.எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து இதற்கான தொகையை வருவாய் மீட்பு சட்டப்படி வசூலிக்க 'வாரன்ட்' பிறப்பித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X