காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை, திரவுபதியம்மன் கோவில், மஹாபாரத அக்னி வசந்த விழாவையொட்டி, நாளை முதல், மே 26 வரை, தினமும், இரவு 9:00 மணிக்கு மஹாபாரதம், தெருக்கூத்து நாடகம் நடைபெறுகிறது.
பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெரு, திரவுபதியம்மன் கோவிலில், மகாபாரத அக்னி வசந்த திருவிழா கடந்த, 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினமும், மதியம் 2:00 மணி முதல் 6:00 மணி வரை முத்துகணேசன் மஹாபாரத சொற்பொழிவாற்றுகிறார்.
விழாவின் மற்றொரு நிகழ்ச்சியாக, நாளை முதல், மே 26 வரை என, தொடர்ந்து, 12 நாட்கள் தினமும் இரவு, 9:00 மணிக்கு, குண்டையார் தண்டலம், மாரியம்மன் தெருக்கூத்து நாடக சபாவின், மஹாபாரத தெருக்கூத்து நாடகம் நடைபெறுகிறது. துவக்க நாளான, நாளை இரவு, 9:00 மணிக்கு 'வில் வளைப்பு - திரவுபதி திருமணம்' என்ற தலைப்பில் நாடகம் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை பாண்டவ சமேத திரவுபதி அம்மன் இறைபணி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement