பெ.நா.பாளையம்:காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏரோநாட்டிக்கல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.ஏரோநாட்டிக்கல் துறைக்கு பெரும் பங்காற்றிய தியோடர் வோன் கர்மான் பிறந்தநாளையொட்டி, இந்நிகழ்ச்சி நடந்தது.பள்ளி மாணவர்களிடையே விமானம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியின், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இந்நிகழ்ச்சி நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை சுகுணா வரவேற்றார். நாட்டு நலப்பணி திட்ட தலைவர் கேசவசாமி, பள்ளி மேலாண்மை குழுவின் தலைவர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். கோவை மாவட்ட குழந்தை தொழில் தடுப்பு திட்டத்தின் இயக்குனர் விஜயகுமார் தலைமை துவக்கி வைத்தார்.முகாமில், கல்லூரியின் ஏரோநாட்டிகல் துறையின் துணை பேராசிரியர் சிவக்குமார் தலைமையில், ஆராய்ச்சி மாணவர்கள் கவுதம், ராம் தினேஷ், மதியழகன், கணேஷ் ஆகியோர் விமானவியல் குறித்தும், விமானங்கள் இயங்கும் விதம் குறித்தும், பள்ளி பாடங்களில் உள்ள விமானவியல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை விளக்கி, செய்முறை பயிற்சி அளித்தனர். ஆசிரியர் ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE