சென்னை, ''இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள மழை நீர் வடிகால்வாய்களை துார் வார 33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு பருவ மழைக்கு முன்னதாக, சென்னையில் உள்ள, 8,835 எண்ணிக்கையிலான 2,071 கி.மீ., நீளமுள்ள வடிகால் துார் வாரும் பணியை மாநகராட்சி தற்போது துவங்கியுள்ளது.முதற்கட்டமாக, தேசிய நகர்ப் புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் மண்டலங்களில் உள்ள, 16.50 லட்சம் ரூபாய் செலவில் துார் வாரப்பட்டு வருகிறது.இதைத் தவிர மீதமுள்ள, 13 மண்டலங்களில், மழை நீர் வடிகால் துார்வாரும் பணி துவங்க உள்ளது.இதுகுறித்து, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:சென்னையில் உள்ள, 13 மண்டலங்களில் உள்ள மழை நீர் வடிகாலை துார்வார, 33 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மழை நீர் வடிகால்களில், மனிதர்கள் இறங்கி துார் வார முடியாது.எனவே, ஒரு மேன்ஹோலில் இருந்து மற்றொரு மேன்ஹோலுக்கு, துார் வார முடியாதவாறு துாரம் இருப்பின், அதற்கு இடைப்பட்ட இடத்தில், புதிதாக மேன்ஹோல் அமைக்கப்படும். அதேபோல், 186 கோடி ரூபாய் செலவில், மழைநீர் தேங்கிய இடங்களில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த கால்வாய் பணிகளும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்படும் மழைநீர் வடிகால், ஏற்கனவே உள்ள 4 செ.மீ., அகலத்தை விட 7 செ.மீ., அகலமாக கட்டப்படும். இப்பணிகள் மேற்கொள்ளும் போது போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், உரிய பாதுகாப்புடன் மேற்கொள்ள, ஒப்பந்தாரர்களுக்கு அறிவுறுத்தப்படும். இப்பணிகளை அதிகாரிகள் நேரடியாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE