சென்னை, : எழும்பூரில் விறுவிறுப்பாக நடந்து வரும் மாநில கூடைப்பந்து போட்டியில், சென்னையைச் சேர்ந்த லயோலா அல்லது இந்தியன் வங்கி அணிகள், கோப்பை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது.மேயர் ராதாகிருஷ்ணன் நினைவு கூடைப்பந்து சங்கம் சார்பில், 18வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி, சென்னை எழும்பூர், வெங்குப்பிள்ளை தெருவிலுள்ள மாநகராட்சி மின்னொளி விளையாட்டு மைதானத்தில் நடந்து வருகிறது.இதில், இந்திய அளவில் தலைசிறந்த அணிகளாக இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ., வங்கி, ஐ.சி.எப்., மற்றும் கல்லுாரிகள் உள்ளிட்டவற்றில், ஆண்களில் 40 அணிகளும், பெண்களில் 10 அணிகளும் மோதி வருகின்றன.போட்டிகள், 'நாக் -அவுட் மற்றும் லீக்' முறையில் நடந்து வருகின்றன.அனைத்து நாக் அவுட் போட்டிகள் முடிவில், எட்டு அணிகளுக்கான காலிறுதி லீக் போட்டிகள் நேற்று நடந்தன. அதில், ஆண்களுக்கான ஆட்டங்களில் முதல் லீக்கில் லயோலா அணி மற்றும் அம்பத்துார் அணிகள் மோதின.அதில், 83 - 23 என்ற புள்ளிக் கணக்கில், லயோலா அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.அதேபோல், சத்தியபாமா அணி மற்றும் டி.என்.பி.ஏ., அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில், 92 - 91 என்ற புள்ளிகளில், சத்தியபாமா அணி வெற்றி பெற்றதுமற்றொரு போட்டியில் ஜே.ஐ.டி., அணி, 76 - 47 என்ற புள்ளிக் கணக்கில் மகேந்திர அணியையும், இந்தியன் வங்கி அணி, 78 - 28 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்.பி.ஓ.ஏ., அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன.வெற்றி பெற்ற நான்கு அணிகளும், நேற்று இரவு முதல் அரையிறுதி லீக் போட்டிகளில் மோதி வருகின்றன.இதுவரை நடந்த அனைத்து போட்டிகளை பொறுத்தவரை, இறுதிப் போட்டிக்கு லயோலா மற்றும் இந்தியன் வங்கி அணிகள் தகுதி பெற்று, கோப்பையை தட்டிச் செல்ல வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE