சென்னை: விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்மாவட்ட ஹாக்கி 'லீக்'போட்டியில், செயின்ட் ஜோசப் அணி கோப்பையை வென்றது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், மாவட்ட ஹாக்கி லீக் போட்டி, காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள எஸ்.ஆர்.எம்., செயின்ட் ஜோசப், ரெட் ஸ்டார் ஹாக்கி கிளப் உள்ளிட்ட ஏராளமான அணிகள் பங்கேற்றன.மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், செயின்ட் ஜோசப் அணி, 4 - 0 என்ற கோல் கணக்கில், பரமேஸ்வரன் ஹாக்கி கிளப் அணியை வீழ்த்தியது.மற்றொரு போட்டியில், செயின்ட் ஜோசப் அணி, 5 - 0 என்ற கோல் கணக்கில், ராஜு நினைவு ஹாக்கி கிளப் அணியை தோற்கடித்து, சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது.இறுதிச்சுற்றுக்கு முந்தைய சுற்றான சூப்பர் லீக் போட்டியில், செயின்ட் ஜோசப் - எஸ்.ஆர்.எம்., அணிகள் மோதின. அதில், 1 - 1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.இறுதி லீக் போட்டியில், பேட்டை ஹாக்கி கிளப் மற்றும் செயின்ட் ஜோசப் அணிகள் இடையே பலப்பரீட்சை நடந்தது. அதில் 3 - 0 என்ற கோல் கணக்கில், செயின்ட் ஜோசப் அணி வெற்றி பெற்றது.அனைத்து லீக் போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில், செயின்ட் ஜோசப் அணி முதலிடம் பிடித்து, கோப்பையை தட்டிச் சென்றது. எஸ்.ஆர்.எம்., அணி இரண்டாவது இடத்தையும், பேட்டை அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE