தொழில் பாதுகாப்பு வரைவு விதிகள் விளக்க கலந்துரையாடல் கூட்டம்

Added : மே 13, 2022
Advertisement
சென்னை :தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலைமைகளின் வரைவு விதிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், கிண்டி தொழிற்பேட்டை இயக்கக வளாகத்தில் நேற்று நடந்தது.கலந்துரையாடல் கூட்டத்தை, இயக்குனர் ஜெகதீசன் துவக்கி வைத்து பேசியதாவது:தொழில் பாதுகாப்பு, சுகாதார மற்றும் நிலைமைகளின் வரைவு விதிகள், 'ஆன்-லைன்' வாயிலாக
 தொழில் பாதுகாப்பு வரைவு விதிகள்  விளக்க கலந்துரையாடல் கூட்டம்

சென்னை :தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலைமைகளின் வரைவு விதிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம், கிண்டி தொழிற்பேட்டை இயக்கக வளாகத்தில் நேற்று நடந்தது.கலந்துரையாடல் கூட்டத்தை, இயக்குனர் ஜெகதீசன் துவக்கி வைத்து பேசியதாவது:தொழில் பாதுகாப்பு, சுகாதார மற்றும் நிலைமைகளின் வரைவு விதிகள், 'ஆன்-லைன்' வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வரைவு விதிகளை முழுமையாக படித்து புரிந்துக் கொண்டு, அது குறித்த தங்களின் ஆலோசனைகள், குறைபாடுகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அனுப்ப வேண்டும். அந்த ஆலோசனைகள் நியாயமாக இருப்பின், அவை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.இவ்வாறு, அவர் பேசினார். இணை இயக்குனர் சரவணன், தொழிலாளர் இணை கமிஷனர்- ஆகியோர் வரைவு விதிகள் குறித்து கூறியதாவது:மத்திய அரசின், 'கோட் ரூல்' 13 சட்டங்களாக தொகுக்கப்பட்டுள்ளது. இதில், தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 45 வயது முடிந்த தொழிலாளர்கள் அனைவருக்கும், நான்கு மாதங்களுக்குள் மருத்துவ பரிசோதனை செய்வது மிக அவசியம்.ஒரு தொழிலாளி எங்கு பணிபுரிந்தாலும், அவரது தகவல்களை கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 50 தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனத்தில், பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X