சொத்து வரி பாக்கி நிலுவை குறிப்பிட்டு, 'பேனர்'

Added : மே 13, 2022
Advertisement
திருமங்கலம்: திருமங்கலத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில், ௧௩ லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி பாக்கி உள்ளதை குறிப்பிட்டு, 'பேனர்' வைத்துள்ளனர்.அண்ணா நகர் மண்டலம் 99வது வார்டு, திருமங்கலத்திலுள்ள பிரபல வணிக வளாகத்தின் அருகில், 'ஓ சோன் புராஜெக்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமான, பிரபல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இங்கு மொத்தம் 10 'பிளாக்'குகளில்
 சொத்து வரி பாக்கி நிலுவை குறிப்பிட்டு, 'பேனர்'

திருமங்கலம்: திருமங்கலத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில், ௧௩ லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி பாக்கி உள்ளதை குறிப்பிட்டு, 'பேனர்' வைத்துள்ளனர்.அண்ணா நகர் மண்டலம் 99வது வார்டு, திருமங்கலத்திலுள்ள பிரபல வணிக வளாகத்தின் அருகில், 'ஓ சோன் புராஜெக்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமான, பிரபல அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன.இங்கு மொத்தம் 10 'பிளாக்'குகளில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த குடியிருப்புகளில், 'ஓ சோன் புராஜெக்ட்' நிறுவனத்திற்குச் சொந்தமான 17 குடியிருப்புகளில், மொத்தம் 13.45 லட்சம் ரூபாய்க்கு மேல், சொத்து வரி பாக்கி இருப்பது தெரிந்தது.நிறுவனத்திற்கு பல முறை அறிவுறுத்தியும் பாக்கி தொகையை செலுத்தாததால், மண்டல உதவி வருவாய் அலுவலர்கள், குடியிருப்பு வளாகத்தில் நேற்று எச்சரிக்கை 'பேனர்' வைத்தனர்.அதில், 17 குடியிருப்புகளின் எண்கள் மற்றும் உரிமையாளரின் பெயர், நிலுவை தொகை ஆகியவற்றை குறிப்பிட்டு உள்ளனர். மேலும், உடனடியாக நிலுவை தொகையை செலுத்தவில்லை எனில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X