கொளஞ்சியப்பர் கல்லுாரியில் தாவரவியல் பேரவை துவக்கம் | Dinamalar

கொளஞ்சியப்பர் கல்லுாரியில் தாவரவியல் பேரவை துவக்கம்

Added : மே 13, 2022 | |
விருத்தாசலம்-விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் தாவரவியல் பேரவை தொடக்க விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.தாவரவியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சிவசண்முகம் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி அரசு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் ராமானுஜம் கலந்துகொண்டு, பல்லுயிர் பன்மயம்

விருத்தாசலம்-விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில் தாவரவியல் பேரவை தொடக்க விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.தாவரவியல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் சிவசண்முகம் முன்னிலை வகித்தார்.புதுச்சேரி அரசு மாநில உயர்கல்வி மன்ற உறுப்பினர் ராமானுஜம் கலந்துகொண்டு, பல்லுயிர் பன்மயம் பராமரிப்பில் அண்மைக்கால போக்குகள் குறித்த தலைப்பில், மாணவர்களிடம் விளக்கி பேசினார்.தாவரவியல் துறை தலைவர் நிர்மல்குமார் வரவேற்றார்.இதில், துறை தலைவர்கள் செந்தில்குமார், தமிழரசி, சுகந்தி, பசுபதி, ஹெலன், பேராசிரியர்கள் ஆனந்தன், வீரமுத்து, பாலசங்கு, ரங்கராஜன், அண்ணாமலை, சரவணகுமார், மணிவாசக பெருமாள், ராஜேந்திரன், சிவகுமார் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் அழகு லட்சுமணன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X