விசலுார் கிசா ஏரியில் 12 ஏக்கர் ஆக்கிரமிப்பு மீட்பு

Added : மே 13, 2022
Advertisement
விருத்தாசலம்,-விசலுார் கிசா ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தினை ஊராட்சி துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர்.தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, விருத்தாசலம் அடுத்த விசலுார் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் கிசா எரி உள்ளது.இதில் 12 ஏக்கர் பரப்பிலான ஏரி பகுதியை, தனியார் சிலர்

விருத்தாசலம்,-விசலுார் கிசா ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்பட்ட 12 ஏக்கர் நிலத்தினை ஊராட்சி துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மீட்டனர்.தமிழகத்தில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, விருத்தாசலம் அடுத்த விசலுார் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் கிசா எரி உள்ளது.இதில் 12 ஏக்கர் பரப்பிலான ஏரி பகுதியை, தனியார் சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். பி.டி.ஓ., ஜெயக்குமாரி தலைமையில், நேற்று ஜே.சி.பி., இயந்திரங்கள் உதவியுடன், ஆக்கிரமிப்புகளை மீட்டு கரை அமைக்கும் பணி நடந்தது.இதில், ஊராட்சி தலைவர் ஜெயச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X