ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிக்க முயன்றவர்கள் கைது

Added : மே 13, 2022 | |
Advertisement
தாம்பரம்,: செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கிராமத்திலுள்ள, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.88 சென்ட் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர், தன் சகோதரர்களான ஆசைதம்பி, சேகர், குமார் ஆகியோருடன் சேர்ந்து ௧௯௮௦ல் வாங்கி உள்ளார்.மூவரும் இந்த இடத்தில், அலுவலகம் நடத்தி வந்தனர்.இந்த இடத்தை, மதுராந்தகத்தைச் சேர்ந்த மதுரை என்பவரின் மகன் ரஞ்சித்குமாரின் பெயருக்கு, அப்போதைய

தாம்பரம்,: செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு கிராமத்திலுள்ள, 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 5.88 சென்ட் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவர், தன் சகோதரர்களான ஆசைதம்பி, சேகர், குமார் ஆகியோருடன் சேர்ந்து ௧௯௮௦ல் வாங்கி உள்ளார்.மூவரும் இந்த இடத்தில், அலுவலகம் நடத்தி வந்தனர்.இந்த இடத்தை, மதுராந்தகத்தைச் சேர்ந்த மதுரை என்பவரின் மகன் ரஞ்சித்குமாரின் பெயருக்கு, அப்போதைய திருப்போரூர் இணை பதிவாளர் காசி, அவரது மருமகன் பிரபாகரன் ஆகியோர், ௨௦௨௧ல் போலி ஆவணங்கள் வாயிலாக, செட்டில்மென்ட் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர்.இதற்கு, இணை சார்-பதிவாளர் செல்வசுந்தரி, மதுரை, காசி, காசியின் மருமகன் பிரபாகரன் ஆகியோர் ஆதரவாக இருந்துள்ளனர்.தன் நிலத்தை போலி ஆவணங்கள் வாயிலாக அபகரிக்க நடந்துள்ள முயற்சி குறித்து, வீரமணிக்கு தெரிந்தது.இது குறித்து, கானத்துார் காவல் நிலையத்தில், வீரமணி சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார்.இந்த புகார், தாம்பரம் மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.புகாரின்படி வழக்கு பதிந்த போலீசார், இதில் தொடர்புள்ள காசி, ரஞ்சித்குமார், பிரபாகரன் ஆகியோரை, நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, நிலத்திற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X