உடுமலை;ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், முறைகேடாக பணம் வசூலிப்பதாக, 'திஷா' கமிட்டி கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட 'திஷா' கமிட்டி கூட்டம் நடந்தது. அமைச்சர் சாமிநாதன், எம்.பி., க்கள் சுப்பராயன், கணேசமூர்த்தி, கலெக்டர் வினீத் ஆகியோர், துறைவாரியான பணிகளை ஆய்வு செய்தனர்.* திருப்பூர் மாவட்டத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய, ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மறுக்கின்றன.
நல்ல விலை கிடைப்பதால், கொப்பரை கொள்முதலை வேகப்படுத்த வேண்டும். 'ஆன்லைன்' முன்பதிவு செய்வதை எளிதாக மாற்ற வேண்டும். தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்ய வேண்டும்.* ஜல் ஜீவன் திட்டத்தில், மத்திய, மாநில அரசுகளின், தலா, 45 சதவீத பங்களிப்புடன், பயனாளி, 10 சதவீதம் பங்களிப்பு செலுத்த வேண்டும். உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில், எவ்வித ரசீதும் வழங்காமல், 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது; முறைகேடுகளை தடுக்க வேண்டும்; பயனாளிகளுக்கு, குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.
வேலை உறுதி திட்டத்தில், தொழிலாளருக்கு வேலை அளிப்பது மகிழ்ச்சி. இருப்பினும், மண் வேலை கொடுத்து, அரசு பணத்தை வீணடிக்காமல், உபயோகமான பணிகளை செய்ய திட்டமிட வேண்டும். மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கலாம். பணிகளை தேர்வு செய்யும் முன், ஒன்றியம் வாரியாக தேவைகளை கேட்டறிய வேண்டும்.* விலைவாசி உயர்வு காரணமாக, கழிப்பிட பணிக்கு, 12 ஆயிரம் ரூபாய் மானியம் என்பது பற்றாக்குறையாக இருக்கிறது. கூடுதல் மானியம் வழங்க, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.முடிவில், உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்ட செயல்பாடு குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE