பி.ஏ.பி., பிரதான கால்வாயில் அத்துமீறி குளியல் : உயிரிழப்பை தடுக்க தேவை எச்சரிக்கை

Added : மே 13, 2022 | |
Advertisement
உடுமலை:பி.ஏ.பி., பிரதான கால்வாயில், அத்துமீறி குளிக்கும் சுற்றுலாப்பயணிகளை கட்டுப்படுத்த, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து, கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் பிரதான கால்வாயில் செல்கிறது.

உடுமலை:பி.ஏ.பி., பிரதான கால்வாயில், அத்துமீறி குளிக்கும் சுற்றுலாப்பயணிகளை கட்டுப்படுத்த, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் இருந்து, கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள பி.ஏ.பி., பாசன நிலங்களுக்கு பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது, முதலாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் பிரதான கால்வாயில் செல்கிறது.

இதில், திருமூர்த்தி அணை அருகே, பிரதான கால்வாயில் அத்துமீறி, சுற்றுலாப்பயணிகள் குளிக்கின்றனர். வினாடிக்கு, 900 கன அடிக்கும் மேல் தண்ணீர் செல்லும் பிரதான கால்வாயில், நீரின் போக்கும் அதிகமாக இருக்கும்.நீச்சல் தெரிந்தவர்களையும் இழுத்து செல்லும் அளவுக்கு நீரின் வேகம் இருக்கும் கால்வாயில் ஆபத்து தெரியாமல் குளிக்கின்றனர். குறிப்பாக, பிரதான கால்வாயில் இருந்து, உடுமலை கால்வாய் பிரியும் ஷட்டர் பகுதி திருமூர்த்திமலை ரோட்டின் அருகில் அமைந்துள்ளது.எனவே, சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை ரோட்டில் நிறுத்தி விட்டு, வாய்க்காலில் குளிக்க செல்கின்றனர். இந்த வாய்க்காலில், தவறி விழுந்து பலர் இறந்துள்ளனர்.எனவே, பொதுப்பணித்துறையினர் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், அப்பகுதியில், நீரின் வேகம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உட்பட தகவல்களை உள்ளடக்கிய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.கோடை விடுமுறை சீசனில், பணியாளர்களை நியமித்து, குளிப்பவர்களை எச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல், கெடிமேடு, பூசாரிபட்டி போன்ற இடங்களில், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில், பிரதான கால்வாய் குறுக்கிடுகிறது.இப்பகுதிகளில், சரக்கு வாகனங்களை நிறுத்தி விட்டு, அங்குள்ள கால்வாய் படிகளின் வழியாக இறங்கி, குளிக்கின்றனர்.பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்களுக்கு கால்வாயில் செல்லும் நீரின் வேகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அப்பகுதிகளிலும் எச்சரிக்கை பலகை வைப்பதுடன் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.இது குறித்து திருப்பூர், கோவை மாவட்ட நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X