மின் திருட்டு: ரூ.17 லட்சம் அபராதம் வசூல்| Dinamalar

மின் திருட்டு: ரூ.17 லட்சம் அபராதம் வசூல்

Added : மே 13, 2022 | |
சென்னை:சென்னை தரமணி உள்ளிட்ட பகுதிகளில், மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, மின் வாரியம் 17.57 லட்சம் ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.தமிழக மின் வாரியத்தின் சென்னை விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட ஐ.டி.காரிடார் பகுதியில், மின் திருட்டு தொடர்பாக சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அதில் ஈடுபட்ட

சென்னை:சென்னை தரமணி உள்ளிட்ட பகுதிகளில், மின் திருட்டில் ஈடுபட்டவர்களிடம் இருந்து, மின் வாரியம் 17.57 லட்சம் ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளது.
தமிழக மின் வாரியத்தின் சென்னை விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகள், தரமணி, பெருங்குடி உள்ளிட்ட ஐ.டி.காரிடார் பகுதியில், மின் திருட்டு தொடர்பாக சமீபத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, நான்கு மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து, 15.89 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது. இது தவிர, மின் திருட்டில் ஈடுபட்ட நபர்கள், குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து, அதற்காக கூடுதலாக 1.68 லட்சம் ரூபாயை சமரச தொகையாக செலுத்தியுள்ளனர்.
பொது மக்கள், மின் திருட்டு தொடர்பான தகவல்களை, சென்னை விஜிலென்ஸ் பிரிவு செயற்பொறியாளரிடம், 94458 57591 என்ற மொபைல் போன் எண்ணில் தெரிவிக்கலாம் என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X