ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில், பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதை கண்டித்து, யூனியன் பிரதேசம் முழுதும் போராட்டம் வெடித்துள்ளது. பட்கம் மாவட்டத்திலிருந்து ஸ்ரீநகர் விமான நிலையம் நோக்கி பேரணியாக சென்றவர்களை, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
ஜம்மு - காஷ்மீரில், பல இடங்களில் பண்டிட்களுக்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், 4,௦௦௦க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். அவர்களுக்கு சிறப்பு வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், அரசுத் துறைகளில் வேலை வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பட்கம் மாவட்டத்தின் சதுாரா கிராமத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்துக்குள், நேற்று முன்தினம் மாலை துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் புகுந்தனர். அங்கு எழுத்தராக பணியாற்றி வந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ராகுல் பட், ௩௬, என்பவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் பட் இறந்தார்.இந்நிலையில், நேற்று காலை ஷேக்போரா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பண்டிட்கள், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, ஸ்ரீநகர் விமான நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். தடுப்பை மீறி அவர்கள் விமான நிலையம் நோக்கி சென்றதால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர்.
இந்நிலையில், ராகுல் பட் கொல்லப்பட்டதற்கு, முன்னாள் முதல்வர்கள் மெஹபூபா முப்தி, ஒமர் அப்துல்லா இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, புல்வாமா மாவட்டம், குடோரா பகுதியை சேர்ந்த ரியாஸ் அகமது தோகர் என்ற போலீஸ் கான்ஸ்டபிளை, நேற்று காலை அவரது வீட்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE