சிதம்பரம் மக்களுக்கு வக்காரமாரி குடிநீர்: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

Added : மே 13, 2022
Advertisement
சிதம்பரம்-சிதம்பரம் மக்களுக்கு வக்காரமாரியில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சிதம்பரம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில், புதிதாக அமைக்கப்படவுள்ள காய்கறி மார்க்கெட் இடம் மற்றும் வக்காரமாரி ஏரியை ஆய்வு

சிதம்பரம்-சிதம்பரம் மக்களுக்கு வக்காரமாரியில் இருந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.சிதம்பரம் நகராட்சி வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார். சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தையில், புதிதாக அமைக்கப்படவுள்ள காய்கறி மார்க்கெட் இடம் மற்றும் வக்காரமாரி ஏரியை ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:சிதம்பரம் நகர மக்களுக்கு, வக்காரமாரி நீர்த்தேக்கம் மூலம் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஏரியில் இருந்து சிதம்பரம் நகராட்சிக்கு குடிநீர் வந்து கொண்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லை.இந்த ஏரியில் இருந்து 1915ம் ஆண்டு முதல் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு, சிதம்பரத்திற்கு வரும். அப்போது மக்கள் தொகை குறைவு. தற்போது சிதம்பரம் நகரில் அதிக மக்கள் தொகை இருப்பதால் தண்ணீர் பற்றாக்குறையால், ஆங்காங்கே போர் போட்டு கொடுத்து வந்தனர்.இந்நிலையில், முதல்வர் அறிவித்தபடி பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கில், வக்காரமாரி குடிநீரை சுத்திகரிப்பு செய்ய ரூ. 5 கோடி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.மேலும், கூடுதலாக சிதம்பரம் பகுதி மக்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம், ரூ. 328 கோடியில், சிதம்பரம், அண்ணாமலை நகர் சுற்றியுள்ள 56 கிலோ மீட்டர் அளவிற்கு, கிராமப்புற பகுதியில் குடிதண்ணீர் கொடுக்க விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.சிதம்பரம் உழவர் சந்தையில் காய்கறி மார்க்கெட் அமைக்க இடம் தேர்வு செய்து, ரூ. 5 கோடியே 78 லட்சத்தில் டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்க உள்ளது. ஆண்டுதோறும் கொள்ளிடம் பகுதியில் முதலைகள் கடித்து, அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.ஆய்வின்போது, கலெக்டர் பாலசுப்ரமணியம், சிதம்பரம் நகராட்சி சேர்மன் செந்தில்குமார், எஸ்.பி., சக்திகணேசன், ஆர்.டி.ஓ., ரவி, நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன், பொறியாளர் மகாராஜன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X