வலை இல்லாத கிணறு
உடுமலை அருகே கோட்டமங்கலம் வரதராஜபுரத்தில் குடியிருப்பில், பொதுக்கிணறு உள்ளது. இக்கிணற்றில் நீண்ட காலமாக வலை அமைக்கப்படவில்லை. அப்பகுதியிலுள்ள குழந்தைகள் அங்கு தான் விளையாடுகின்றனர். இதனால் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படுகிறது. அதில் வலை அமைக்க வேண்டும்.- செந்தில்குமார், வரதராஜபுரம்.

விபத்துக்கு வாய்ப்பு
உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது வாகன ஓட்டுனர்களின் கவனத்தை ஈர்க்கிறது. விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகனசுந்தரம், உடுமலை.

படகு இல்லத்தில் பிளாஸ்டிக்திருமூர்த்தி அணையில் படகு இல்லம் உள்ளது. இங்கு படகு சவாரி நீண்ட காலமாக செயல்படுவதில்லை. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசிச்சென்று விடுகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கணேசன், உடுமலை.
வீணாகும் வாகனம்
உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், நீண்ட நாட்களாக வாகனம் துருப்பிடித்து வீணாகி வருகிறது. அங்கு புதர்மண்டியும் காணப்படுகிறது. இதற்கு ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கந்தசாமி, உடுமலை.

பார்க்கிங் வசதி தேவை
திருமூர்த்தி மலையில் கோவிலுக்கு வரும், சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்படவில்லை. இதனால், அவர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அங்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்த, கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்ய வேண்டும்.- ராஜேந்திரன், உடுமலை.

பராமரிப்பில்லாத மயானம்
பெரியகோட்டை ஊராட்சி மயானத்தில் பராமரிப்பு இல்லாததால், புதர்மண்டிக்கிடக்கிறது. இதனால், அங்கு வருவோர் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமசாமி, உடுமலை.

செயல்படுவதில்லை
உடுமலை நகராட்சி பழைய கட்டடத்தில் சங்கு உள்ளது. இது நீண்ட நாட்களாக செயல்படுவதில்லை. இதனால் வீணாகி வருகிறது. இதை செயல்படுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கார்த்திக்குமார், உடுமலை.

எச்சரிக்கை பலகை அமைக்கணும்
தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.வி., மில் வாய்க்கால் பாலத்தில் ரோடு சந்திப்பில் எச்சரிக்கை பலகை இல்லை. இதனால், வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. இங்கு எச்சரிக்கை பலகையை நெடுஞ்சாலைத்துறையினர் வைக்க வேண்டும்.- செந்தமிழ் செல்வன், உடுமலை.

நோய் அபாயம்
உடுமலை - பழநி ரோடு அண்ணாகுடியிருப்பு முதல் தனியார் திருமண மண்டபம் வரை, கழிவுகளை மூட்டையாக வீசி சென்று விடுகின்றனர். இதனால், துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.- சுரேஷ், உடுமலை.

சுரங்கப்பாலத்தை சீரமைக்கணும்
உடுமலை, கொழுமம் ரோடு ரயில்வே கேட் பகுதியில், சுரங்கப்பாலம் பயன்படுத்தப்படாமல் புதர் மண்டிக் காணப்படுகிறது. இதனால் ரயில் வரும் நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சுரங்கப்பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சுந்தர், உடுமலை.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement