15 ஆயிரம் நெல்மூட்டைகள் நனைந்து சேதம்

Added : மே 13, 2022
Advertisement
திட்டக்குடி-திட்டக்குடி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையினால் மருதத்துார், ஆதமங்கலம் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. திட்டக்குடி அடுத்த மருதத்துார், ஆதமங்கலம், சாத்தநத்தம் கிராமங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வெலிங்டன் பாசன விவசாயிகள் அறுவடை

திட்டக்குடி-திட்டக்குடி பகுதியில் நேற்று இரவு பெய்த மழையினால் மருதத்துார், ஆதமங்கலம் நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

திட்டக்குடி அடுத்த மருதத்துார், ஆதமங்கலம், சாத்தநத்தம் கிராமங்களில் அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இங்கு 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த வெலிங்டன் பாசன விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நெல் மூட்டைகளை விவசாயிகள் திறந்த வெளியில் அடுக்கி வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக அடுக்கி வைத்திருந்த 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. இதேபோல் அருகேரி கிராமத்தில் செயல்படாமல் உள்ள நெல் கொள்முதல் நிலையம், மீண்டும் துவங்கும் என்ற எண்ணத்தில் விவசாயிகள் கொண்டு வந்து வைத்திருந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல்மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. மேலும் சில தினங்கள் மழை உள்ளது என்ற வானிலை மைய அறிவிப்பால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X