கொரோனாவால் பெற்றோரை இழந்த 157 குழந்தைகளுக்கு ரூ.4.71 கோடி

Added : மே 13, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதிற்குட்பட்ட 157 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.4.71 கோடி முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர்சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.அவர் கூறியுள்ளதாவது:இம்மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த 18

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் தாய் அல்லது தந்தையை இழந்த 18 வயதிற்குட்பட்ட 157 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.4.71 கோடி முதல்வர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர்சங்கர்லால் குமாவத் தெரிவித்தார்.

அவர் கூறியுள்ளதாவது:இம்மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா தொற்றால் தாய் அல்லது தந்தையை அல்லது இருவரையும் இழந்த 18 வயதிற்குட்பட்ட 183 குழந்தைகள்இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. இவர்களில் 157 குழந்தைகளுக்கு ரூ.4.71 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எனவே பாதிக்கப்பட்ட தகுதியான குழந்தைகள் இதுவரை நிவாரண நிதி பெறாதவர்கள் சைல்டு லைன் 1098 மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தொலைபேசி எண் 04567---231 098ல் தொடர்பு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X